Home இலங்கை சமூகம் சர்வதேச நீதிப் பொறி முறையை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்

சர்வதேச நீதிப் பொறி முறையை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்

0

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை
வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க்
குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை
பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில்
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கிழக்கு பகுதியில் எட்டு மாவட்டங்களில் குறித்த போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், இடம்பெற்றதுடன்
திருகோணமலையில் இடம் பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும்
இதில் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும்,சர்வதேச பொறி முறை தேவை என பல
வாசகங்களை ஏந்தியிருந்தனர் 

NO COMMENTS

Exit mobile version