Home சினிமா சூர்யா 45 ஷூட்டிங்கில் முன்னணி நடிகை.. பல வருடங்கள் பின் இணைந்த மாஸ் காம்போ

சூர்யா 45 ஷூட்டிங்கில் முன்னணி நடிகை.. பல வருடங்கள் பின் இணைந்த மாஸ் காம்போ

0

சூர்யா 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கங்குவா. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

தற்போது கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 – வது படத்தில் நடிக்கிறார்.

மாஸ் காம்போ 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

இன்று மறுமணம்.. மனைவி குறித்து முதன்முறையாக மனம் திறந்த நாக சைதன்யா

அதாவது, கோவையில் இன்று சூர்யா 45 படத்தின் சூட்டிங்கில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வ தகவல் என்றால் ஆறு படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version