Home அமெரிக்கா தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் போர்.. புடினிடமிருந்து ட்ரம்புக்கு அழைப்பு..!

தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் போர்.. புடினிடமிருந்து ட்ரம்புக்கு அழைப்பு..!

0

ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் ட்ரம்பிற்கு மேற்கொண்டுள்ள தொலைபேசி அழைப்பின் போதே ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார். 

கைதிகள் பரிமாற்றம் 

இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி அழைப்பு குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனாதிபதி புடின் இன்று காலை எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அழைத்தார், ஆனால் மிக முக்கியமாக, ஈரான் பற்றிப் பேச வேண்டியிருந்தது.

நாங்கள் நீண்ட நேரம் உரையாடினோம். ரஷ்ய – உக்ரைன் பற்றிப் பேசுவதற்கு மிகக் குறைந்த நேரமே செலவிடப்பட்டது. 

இரு தரப்பிலிருந்தும் உடனடியாக அதிக எண்ணிக்கையிலான கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளார்கள். அழைப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

இஸ்ரேல் – ஈரானில் நடக்கும் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் நினைக்கிறார், அது தொடர்பில் நானும் விளக்கினேன், அவருடைய போரும் முடிவுக்கு வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version