அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பல அதிரடியான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவு
இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளதுடன், அதன் மொத்த நிதியில் 18 வீதம் அமெரிக்காவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
Trump just withdrew the United States from the World Health Organization.
The US is now the only country in the world besides Liechtenstein to not be a member of the organization. pic.twitter.com/MnP0k6yjtH
— No Lie with Brian Tyler Cohen (@NoLieWithBTC) January 21, 2025
மேலும், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலகில் அதிகளவு கார்பன் மாசு ஏற்படுத்தும் நாடான அமெரிக்கா காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவு,
புவி வெப்பமயமாதலை எதிர்த்து போரிடும் உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவை அதன் நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து விலக செயயும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோதும் ட்ரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.