Home அமெரிக்கா உச்சத்தை தொடும் மஸ்க் – ட்ரம்ப் முறுகல்..!

உச்சத்தை தொடும் மஸ்க் – ட்ரம்ப் முறுகல்..!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையிலான பதற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மன் சான்சலருடன் நடந்த சந்திப்பில், மஸ்க், கையெழுத்து சட்டத்தை விமர்சித்திருந்தமை குறித்து தான் ஆச்சர்யம் மற்றும் ஏமாற்றம் அடைந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ட்ரூத்’ எனப்படும் ட்ரம்பின் சமூக வலைத்தளத்தில், மஸ்க் மனநிலை சரி இல்லாதவராக மாறி வருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

‘Doge’ அமைப்பு மூலம் அதிகப்படியான செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த எலோன் மஸ்க், கடந்த மாதம் தனது அரச பதவியில் இருந்து விலகினார்.

மந்த நிலை

இதனையடுத்து, ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையிலான மோதல் தீவிரத்தன்மையை அடைந்துள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

உதாரணமாக, ட்ரம்பின் வாரிக்கொள்கை இரண்டாம் பாதியில் மந்த நிலையை ஏற்படுத்தும் என மஸ்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ட்ரம்பின் பிரசாரங்களுக்காக மஸ்க் 290 மில்லியன் டொலர்களை செலவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version