Home இலங்கை அரசியல் அமெரிக்காவின் புதிய இலங்கை தூதுவராக எரிக் மேரின் பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் புதிய இலங்கை தூதுவராக எரிக் மேரின் பெயர் பரிந்துரை

0

 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த அனுபவமிக்க தூதுவராகத் திகழும் எரிக் மேயர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கான அமெரிக்காவின் தூதுவராக எரிக் மேயரை பரிந்துரைத்து, அந்த நியமனத்திற்கான ஒப்புதலை பெறும் வகையில் செனட்டுக்கு பரிந்துரைத்துள்ளார்.

தொலைநோக்குடன் பணியாற்றும் மூத்த வெளிநாட்டு சேவையாளர் ஒருவர் என கருதப்படும் மேயர் தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள் பணியகத்தில் சிரேஸ்ட அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

இந்த பதவியில் அவர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பை மேற்கொண்டு வருகிறார். 

எரிக் மேயர் கலிபோர்னியாவின் பகர்லீ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பட்டதாரி என்பதுடன் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டப் படிப்பினையும் பூர்த்தி செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version