Home அமெரிக்கா அமெரிக்காவின் முக்கிய அமைப்பின் வெறுக்கத்தக்க செயல்: கடுமையாக சாடிய ட்ரம்ப்

அமெரிக்காவின் முக்கிய அமைப்பின் வெறுக்கத்தக்க செயல்: கடுமையாக சாடிய ட்ரம்ப்

0

அமெரிக்காவின் வட கரோலினாவில் வீசிய ஹரிகேன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருக்கு ஃபெடரல் அவசர மேலாண்மை நிறுவனம்(FEMA) உதவ மறுத்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் வட கரோலினாவில் வீசிய ஹரிகேன் சூறாவளியால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை, டொனால்ட் ட்ரம்ப் இன்று(24.01.2025) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஏற்க முடியாத ஒரு விடயம்

இதன்போது, தங்களது வீடுகளில் ட்ரம்ப்பை ஆதரிப்பதை பிரதிபலித்தவர்களுக்கு உதவி வழங்க ‘FEMA’ அமைப்பின் சில ஊழியர்கள் உதவ மறுத்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ‘FEMA’ அமைப்பினர் தங்களது கடமையை சரியாக செய்யவில்லை என ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்னுமும் வட கரோலினாவில் வசிக்கும் சிலர் மின்சாரம் மற்றும் கொதித்த நீர் இன்றி வாழ்ந்து வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் ஏற்க முடியாத ஒரு விடயம் என அவர் கூறியுள்ளார். 

ஊழியர் பணி இடைநீக்கம்

முன்னதாக, ‘FEMA’ அமைப்பின் தலைமை ஊழியர் ஒருவர் ட்ரம்ப்பின் ஆதரவுப் படங்கள் வீடுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பின் அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவி வழங்காமல் புறக்கணிக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனையடுத்து ‘FEMA’ அமைப்பிலிருந்து குறித்த ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version