Home அமெரிக்கா புதிய வரி விதிப்புக்களை அறிவித்தது அமெரிக்கா!

புதிய வரி விதிப்புக்களை அறிவித்தது அமெரிக்கா!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, வாகன இறக்குமதிகள் மீது முன்னர் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரியை அமெரிக்கா இன்று நள்ளிரவு முதல் நடைமுறைபடுத்தவுள்ளது. 

அதேநேரம், இலங்கை பொருட்கள் மீது 44 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பொருட்கள் மீது 26 சதவீதம் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பரஸ்பர வரிகள் 

அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் வகையில் புதிய வரிகளை அமெரிக்கா நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. 

அதற்கமைய, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் இதற்கான அறிவிப்புக்களை நேரலையாக வழங்குகின்றார். 

இதன்போது, “நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்து வெளிநாட்டு தயாரிப்பு வாகனங்களுக்கும் 25 சதவீத வரியை விதிப்போம்” என்று ட்ரம்ப் கூறினார். 

இதன்படி மேலும் பல நாடுகளுக்கான வரிவிதிப்புக்களையும் ட்ரம்ப ்அறிவிக்கவுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version