உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த உடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் பேசியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த உடனே ட்ரம்ப் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.
ட்ரம்ப் கூறிய விடயங்கள்
குறித்த குறுஞ்செய்தியில், FBI குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தயார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் எனவும் உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து, பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய ட்ரம்ப், மீண்டும் என்னுடன் பேசிய போது, தாக்குதல் நடத்திய குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையவர்களே அன்றி வேறு யாருமில்லை எனக் கூறினார்.
ஆனால், தாக்குதலுக்கு பின்னால் மேலும் சில முஸ்லிம் தரப்பினர் இருப்பதாக தற்போது அரசாங்கம் கூறிவருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
