Home முக்கியச் செய்திகள் பிரசார கூட்டத்தில் திடீரென்று மருத்துவ உதவி கேட்ட டொனால்ட் ட்ரம்ப்: வெளியான காரணம்

பிரசார கூட்டத்தில் திடீரென்று மருத்துவ உதவி கேட்ட டொனால்ட் ட்ரம்ப்: வெளியான காரணம்

0

தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென உரையை நிறுத்திவிட்டு மருத்துவ உதவி கோரியமை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

குறித்தச் சம்பவமானது நேற்று (22) வடக்கு கரோலினாவில் (North Carolina) டெனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபட்டுக்கெண்டிருக்கும் போது இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குப்பற்றிய ஒருவருக்கு மருத்துவ உதவி தேவை என்று உணர்ந்ததை அடுத்து, கூட்டத்தில் ட்ரம்ப் தனது உரையை நிறுத்தியுள்ளார்.

மருத்துவ உதவி

துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப் குறித்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு வைத்தியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் குறித்த பெண் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சென்று அவரின் உடல்நிலை தொடர்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்பின் இந்த செயலானது, பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர்களிடையே பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version