Home இலங்கை அரசியல் ட்ரம்பின் முடிவினால் மனங்குளிர்ந்த ஜனாதிபதி அநுர!

ட்ரம்பின் முடிவினால் மனங்குளிர்ந்த ஜனாதிபதி அநுர!

0

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) பணிகளை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவானது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நிம்மதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டர்ம்ப நிர்வாகம், வெளிநாடுகள் மீதான பங்களிப்பை குறைத்து அமெரிக்காவின் பொருளாதராத்தையே பிரதான காரணியாக எடுத்துக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஒரு நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்பினால், அதனை செயற்படுத்த கூடிய கருவியாக USAID நிறுவனம் இருந்து வந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்திலும் அவரை வெளியேற்றவும், பின்புலத்தில் USAID நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன்படி, USAID இன் பணிகளை இடைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முடிவானது, அநுர அரசாங்கத்திற்கு பாரிய நிம்மதியையும் அமைதியையும் வழங்கி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பான விரிவான விடயங்களை ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்….

https://www.youtube.com/embed/tMhd_VVUv6k

NO COMMENTS

Exit mobile version