ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முன்வைத்த விமர்சனத்திற்கு ரஷ்ய தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என ட்ரம்பின் கோபம் மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக தெரிவித்து இருக்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உதவியதற்காக அமெரிக்கத் தலைவருக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வான்வழித் தாக்குதல்
உக்ரைன் மீது இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதன் மூலம் புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும். ரஷ்யா மீதான புதிய தடைகளை நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் கூடவே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
