Home இலங்கை பொருளாதாரம் ட்ரம்பின் முடிவால் இலங்கை அரசுக்கு ஏற்படப்போகும் பெரும் பாதிப்பு

ட்ரம்பின் முடிவால் இலங்கை அரசுக்கு ஏற்படப்போகும் பெரும் பாதிப்பு

0

வரலாற்றில் இலங்கையின் பொருளாதாரமானது உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தில் ஏற்பட்ட அசாதாரணமான நிலைமைகளால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.  அந்த வரிசையில் தற்போது  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) எடுத்துள்ள முடிவினாலும் கடுமையான பாதிப்பினை இலங்கை எதிர்நோக்கவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார். 

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், கடந்தகால யுத்தங்கள், கோவிட்  தொற்று நோய் போன்ற பல்வேறு காரணிகளால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது. அதேசமயம், இலங்கையின் பொருளாதாரம் மிகச் சிறியது. அந்நிய செலாவணி கையிருப்பும் மிகக் குறைவானதே.  இவற்றுள் மீளச் செலுத்த வேண்டிய தொகையும் உண்டு என பேராசிரியர்  சுட்டிக்காட்டியுள்ளார்.  

இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தற்போது விதித்துள்ள வரி விகிதம் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு பாரிய அடியாகக் காணப்படும். அதிலும் ஆடைத் துறை பாரிய பாதிப்பை சந்திக்கவுள்ளது.  பலர் வேலையிழக்கும் அபாயம் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version