Home அமெரிக்கா ட்ரம்புக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

ட்ரம்புக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் வாஸ்குலர் பரிசோதனைக்கு (vascular test) உட்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் ட்ரம்புக்கு பொதுவான நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

நரம்பு நோய் 

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

நாள்பட்ட சிரை பற்றாக்குறை (Chronic venous insufficiency) என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் திரிபு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் ஒரு நிலை ஆகும். 

இந்நிலைமை உலகளவில் 20இல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுகிறது எனவும் பெரும்பாலும் நரம்புகளில் சேதமடைந்த வால்வுகளின் விளைவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, இது சாதாரண ஒரு நோய் நிலைமை தான் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 79 வயதான ட்ரம்பிற்கு ஆழமான நரம்பு இரத்த உறைவு அல்லது தமனி நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், ஜனாதிபதி ட்ரம்ப் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் எந்த அசௌகரியத்தையும் அனுபவிக்கவில்லை என்றும் லீவிட் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version