Home உலகம் சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்: நேரடி விவாதத்திற்கு தயாராகும் கமலா ஹாரிஸ் – ட்ரம்ப்

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்: நேரடி விவாதத்திற்கு தயாராகும் கமலா ஹாரிஸ் – ட்ரம்ப்

0

அமெரிக்க (USA) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) – கமலா ஹாரிஸ் (Kamala Harris) இடையே நேரடி விவாத நிகழ்ச்சி ஒன்று  நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விவாத நிகழ்ச்சியானது, அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், ”விவாதங்களை நடத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் விவாதங்களை எதிர் நோக்குகிறேன். ஏனென்றால் நமது சாதனை நேராக மக்களை சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கமலா ஹாரிஸ் 42 சதவீதமும், டொனால்ட் டிரம்ப் 37 சதவீதமும் ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

தற்போதுள்ள சூழலில் அமெரிக்க தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வரும் நிலையில் சக்தி மிகுந்த நாட்டின் சக்தி வாய்ந்த வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடைபெறும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version