Home உலகம் வெளிநாட்டு தொழிலாளர்களை நாடும் ட்ரம்ப.! வெளியிடப்பட்ட அறிவிப்பு

வெளிநாட்டு தொழிலாளர்களை நாடும் ட்ரம்ப.! வெளியிடப்பட்ட அறிவிப்பு

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

அங்குள்ள வேலைகளை நிரப்ப அமெரிக்காவில் போதுமான திறமையான தொழிலாளர்கள் இல்லை என்று ட்ரம்ப சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு செய்தி சனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதபதி இந்த தகவலை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

H-1B விசா

இந்த ஆண்டு தொடக்கத்தில் H-1B விசா விண்ணப்பங்களுக்கு அவரது நிர்வாகம் $100,000 விண்ணப்பக் கட்டணத்தை விதித்த பின்னர் டர்ம்பின் மேற்படி அறிக்கை வெளியாகியுள்ளது.

Image Credit: ABC News

குறித்த விசா முறையை அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து அதிக திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த பரவலாகப் பயன்படுத்துகின்றதாக கூறப்படுகிறது.

இதன்படி, செப்டம்பரில், H-1B விசாவை நாடும் எவரும் $100,000 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version