Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

0

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 88 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி

அதற்கு பதிலீடாக அமெரிக்க ஜனாதிபதியினால் இலங்கைக்கு எதிராக 44 வீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்தாக மாறியுள்ளது.

அமெரிக்காவுடன் தீர்க்கமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரியை குறைக்க தவறும் பட்சத்தில், இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

இலங்கையின் வர்த்தக இடைவெளி அதிகமாக காணப்படும் நிலையில், நாட்டுக்கு டொலரின் உள்வருகை கணிசமாக குறைவடையும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து வரும் இலங்கைக்கு இதுவொரு ஆபத்தான தருணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version