Home இலங்கை சமூகம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1200 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1200 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்

0

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபா மதிப்பிலான சமையல் மஞ்சள் மூட்டைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

குறித்த மஞ்சள் மூட்டைகளை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மதியம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி அருகே களிமண்குண்டு அடுத்த சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இதையடுத்து 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோகிராம் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version