Home இலங்கை சமூகம் செவ்வந்தியை அழைத்து வர நேபாளத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள்

செவ்வந்தியை அழைத்து வர நேபாளத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள்

0

நேபாளத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின்ர் இரண்டு முக்கிய அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி  பல மாதங்களாக தலைமறைவாகியிருந்தநிலையில்,  நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை 

இந்த நிலையில், இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தியை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உதவுவதற்கான மேலதிகமாக  விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தற்போது நேபாளத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், குறித்த அதிகாரிகள் இன்று மாலை இஷாரா செவ்வந்தி மற்றும் அவரோடு இணைத்து கைது செய்யப்பட்ட  ஏனைய சந்தேகநபர்களுடன் நாட்டை வந்தடைவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள், நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார். 

அவரோடு இணைத்து மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.  அவர்களில் தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கி சகாவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. 

NO COMMENTS

Exit mobile version