Home உலகம் சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி

சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி

0

இந்திய தொலைக்காட்ச்சியின் தொடர் நாடகம் ஒன்றில் நடித்து வரும் அமன் ஜெய்ஷ்வால் (Aman Jaiswal) சாலை விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (17.01.2025) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியலருவதாவது, நடிகர் அமன், தனது நண்பர் அபிஷேக் மிஸ்ரா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனை

இதன் போது ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில்  (Jogeshwari Highway) வைத்து டிபர் ரக வாகனம் ஒனறு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நடிகர் அமன், உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள காமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட அமன், 1 மணிநேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

23 வயதாகும் இளம் சீரியல் நடிகரின் மறைவு சின்னத்திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version