Home சினிமா உச்சத்தில் சிங்கப்பெண்ணே.. டிஆர்பி-யில் டாப் 5 இடங்களையும் பிடித்த சன் டிவி!

உச்சத்தில் சிங்கப்பெண்ணே.. டிஆர்பி-யில் டாப் 5 இடங்களையும் பிடித்த சன் டிவி!

0

சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் டிஆர்பியில் தொடர்ந்து பெரிய போட்டி இருந்து வருகிறது. இருப்பினும் ப்ரைம் டைம் தொடர்களின் ரேட்டிங்கில் சன் டிவியின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது.

இந்த வருடத்தின் 42வது வாரத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

ரேட்டிங்

ஆனந்தி – அன்பு திருமண காட்சிகள் பரபரப்பாக ஓடியதால் சிங்கப்பெண்ணே தொடர் அதிகம் டிஆர்பி ரேட்டிங் பெற்று இருக்கிறது. அது 10.86 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

டாப் 5 லிஸ்டில் அடுத்தடுத்த நான்கு இடங்களையும் சன் டிவி தொடர்கள் தான் பிடித்து இருக்கின்றன.

  • சிங்கப்பெண்ணே – 10.86
  • மூன்று முடிச்சு – 10.55
  • கயல் – 9.65
  • மருமகள் – 9.17
  • எதிர்நீச்சல் – 8.96 

NO COMMENTS

Exit mobile version