Home முக்கியச் செய்திகள் யாழில் மோட்டார் சைக்கிளை உடைத்து பணம் திருட்டு: மடக்கி பிடித்த காவல்துறையினர்

யாழில் மோட்டார் சைக்கிளை உடைத்து பணம் திருட்டு: மடக்கி பிடித்த காவல்துறையினர்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மருத்துவர் ஒருவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்ன் சைக்கிளின் பின்புறப் பகுதியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற இருவர் யாழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – தட்டாதெருச் சந்திக்கு அருகில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறப் பகுதியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

பாதுகாப்புக் கமராப் பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நல்லூர், அரசடிப் பகுதியில் வைத்து சந்கேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணை

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரைகளும், 240 மில்லிகிராம் ஹெரோய்னும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் திருடிய பணத்திலேயே அவற்றை கொள்வனவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால், யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பதும், போதைப்பொருள்கள் வாங்குவதற்காகத் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version