Home இலங்கை சமூகம் யாழ். அனலைதீவு கடலில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ். அனலைதீவு கடலில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது

0

யாழ். (Jaffna) அனலைதீவு கடலில் வைத்து 211 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது கடற்படையினரால் (Sri Lanka Navy) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (03.03.2025) இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில் வைத்து கைமாறி வாங்கி வரும்போது கடற்பகுதியில் வைத்து அதிகாலை 4.00 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை மற்றும் காரைநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என
தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : பு. கஜிந்தன் 

NO COMMENTS

Exit mobile version