திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்பட்ட மிருகங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சேருநுவர – தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 53,45
வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இருவர் கைது
சேருநுவர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது கட்டுத்துவக்குடனும் வேட்டையாடப்பட்ட
அலுங்கு மிருகத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மூதூர் நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
