Home இலங்கை அரசியல் சபாநாயகரால் வெகு நேரம் காக்க வைக்கப்பட்ட ரவி கருணாநாயக்க: சபையில் குழப்பம்

சபாநாயகரால் வெகு நேரம் காக்க வைக்கப்பட்ட ரவி கருணாநாயக்க: சபையில் குழப்பம்

0

நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வின் போதே இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை சபாநாயகர் பேச விடாததால் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த பின்னரே பிரதி சபாநாயகர் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கினார்.

ஒழுங்குப்படுத்தல் 

பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில், அரசாங்கம் பணம் அச்சடிக்கவில்லை என்ற கருத்தை தெளிவுப்படுத்த ரவி ஒழுங்குப் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இருப்பினும், ஒழுங்குப் பிரச்சினை ஒன்று இல்லை என தெரிவித்த சபாநாயகர்,விவாதத்திற்கான நேரம் இல்லை என்று சந்தர்ப்பம் வழங்கவில்லை.

கூச்சல் குழப்பம்

இருப்பினும், ரவி கருணாநாயக்க நின்று கொண்டு சந்தர்ப்பம் கோரினார்.

அச்சந்தர்ப்பத்தில் சில கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அப்போது சபாநாயகர் தனது அமர்வை நிறைவு செய்து பிரதி சபாநாயகரிடம் கையளித்தார்.

அது வரை ரவி கருணாநாயக்க நின்று கொண்டிருந்ததுடன் பிரதி சபாநாயகரே அவருக்கு உரையாற்ற சந்தரப்பம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version