கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையின்போதே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அவர்களிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
