Home அமெரிக்கா அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை.. அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிகள் – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை.. அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிகள் – ட்ரம்ப் அறிவிப்பு

0

அமெரிக்காவின் முக்கிய அரசியல் ஆர்வலரான சார்லஸ் ஜேம்ஸ் கிர்க், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

அவரின் மரணத்தை ஒட்டி, அமெரிக்க கொடிகள் அனைத்தையும் அரைகம்பத்தில் பறக்க விடுமாறும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

31 வயதான சார்லஸ் ஜேம்ஸ் கிர்க், ஒரு அமெரிக்க வலதுசாரி அரசியல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் ஊடக ஆளுமை ஆவார். 

ட்ரம்பின் உத்தரவு 

இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்த ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,  ”அமெரிக்காவில் இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட வேறு யாரும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை.

அவர் அனைவராலும், குறிப்பாக நான், நேசிக்கப்பட்டுப் போற்றப்பட்டார், இப்போது அவர் எங்களுடன் இல்லை.

மெலனியாவும் எனது அனுதாபங்களும் அவரது அழகான மனைவி எரிகா மற்றும் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். சார்லி, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என மனவருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவின் உட்டாவில் நடந்த ஒரு நிகழ்வில், அரசியல் ஆர்வலரான சார்லஸ் ஜேம்ஸ் கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version