Home இலங்கை குற்றம் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட தேயிலைகளுடன் இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட தேயிலைகளுடன் இருவர் கைது

0

அனுமதிப்பத்திரமின்றி 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை கொண்டு சென்ற இரண்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு
பிரிவினரால் இன்று(07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையில் பின்னர் 

கம்பளை, வெலம்பொட பிரதேசத்தில் இருந்து தலவாக்கலை நகருக்கு லொறியொன்றில் கழிவு
தேயிலையை கொண்டு செல்வதாக ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த
லொறியினை நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 3500 கிலோகிராம் கழிவுத்
தேயிலை லொறியில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணையில் பின்னர் அவர்கள் இருவரும் ஹட்டன்
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version