Home இலங்கை அரசியல் ரணில் எம்.பி ஆவாரா! இன்று வெளியான அறிவிப்பு

ரணில் எம்.பி ஆவாரா! இன்று வெளியான அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அன்னதானத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கலந்துரையாடல்

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குச் செல்வதாயின், சரியான நேரம் வரும்போது செல்வார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று நான் நம்புகின்றேன். ஆனால் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து நிறைய பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் தற்போது அது தொடர்பில் எவ்விதமான கலந்துரையாடல்களும் இல்லை.

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version