Home இலங்கை அரசியல் மற்றுமொரு ஆளுநர் பதவி விலகினார்

மற்றுமொரு ஆளுநர் பதவி விலகினார்

0

புதிய இணைப்பு

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தார்.

இதன்மூலம் பதவி விலகிய ஆளுநர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்(Mahipala Herath) மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க (Naveen Dissanayake)ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியவர்களாவர்.

ஊவா மாகாண ஆளுநர்

அத்துடன் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானமகே(Anura Widanamage) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநரும் பதவி விலகினார் 

இதேவேளை தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(Lakshman Yapa Abeywardena) நேற்று (22) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளால் தான் பதவி விலக தூண்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரதமரும் விலகினார்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து தினேஸ் குணவர்தன(Dinesh Gunawardene)  விலகியுள்ளார்.

அதேபோன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version