Home இலங்கை சமூகம் வௌ்ளவத்தையில் தொடருந்து மோதி பெண் பலி

வௌ்ளவத்தையில் தொடருந்து மோதி பெண் பலி

0

வௌ்ளவத்தை (Wellawatte) தொடருந்து நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

40 வயதுடைய மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் (Kalubowila Teaching Hospital) பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து நாவலப்பிட்டி

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பதுளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 39 வயதுடைய தெயியன்வல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version