Home சினிமா 50 வினாடி விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகை.. யார் தெரியுமா

50 வினாடி விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகை.. யார் தெரியுமா

0

50 வினாடிக்கு ரூ. 5 கோடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் 50 வினாடி விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இந்த நடிகைக்கு, தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

அஜித் வாழ்க, விஜய் வாழ்க.. என சண்டை போடுபவர்களுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்!

காதல் விவகாரத்திலும் இவருடைய பெயர் அடிபட்டது. ஆனால், அனைத்தையும் தாண்டி இன்று இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். இவர் நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதே போல் 50 வினாடிகள் வரும் விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி வரை இவர் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நயன்தாரா 

அவர் வேறு யாருமில்லை நடிகை நயன்தாரா தான். ஆம், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா, டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் இவர் 50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version