Home இலங்கை குற்றம் வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

0

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பெரியகாளைகோட்டைமடு நெல்லிக்காடு
ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த முற்றுகை நடவடிக்கையானது பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (11) முன்னெடுக்கப்பட்டுள்தோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது ஒரு பீப்பா கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை 

இதனை தொடர்ந்து நெல்லிகாடு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோது  9 பீப்பாக்கள் கொண்ட கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version