நுவரெலியா மாவட்டத்தில் (Nuwara Eliya) உள்ள பெருந்தோட்ட பகுதி ஒன்றின் தேயிலை மலையில் இருந்து இரு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
நோர்வூட், சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்திலேயே குறித்த சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (24) முற்பகல் 10 மணியளவிலேயே அவற்றை மீட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைகளின் நடமாட்டம்
பெருந்தோட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், பல சிறுத்தைகள் சடலங்களாக மீட்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.