Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று(22) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளை இனம் கண்டு கொள்வதில் ஆறு சிக்கலான முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டி இருந்தன.

இரண்டு குற்றவாளிகள்

அவற்றில் இரண்டினை தற்போது நாங்கள் அவிழ்த்துவிட்டோம். அதனுடன் தொடர்புடைய இரண்டு நபர்களையும் அடையாளம் கண்டுள்ளோம்.

வவுணதீவு படுகொலையின் போது விடுதலைப் புலிகளின் மேலங்கியைக் கொண்டு போய் அங்கு வைத்தது யார்?

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்தாசை செய்த அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறும் போது தொலைபேசி ஒன்றின் ஐஎம்ஈஐ நம்பரை நம் நாட்டின் புலனாய்வுத்துறைக்கு வழங்கிச் சென்றிருந்தது.

அந்த தொலைபேசியினைப் பயன்படுத்திய நபர் யார் என்பது போன்ற விபரங்களை நாங்கள் தற்போதைக்குக் கண்டறிந்துள்ளோம். அவற்றினை விரைவில் வெளிப்படுத்துவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version