மட்டக்களப்பு(natticaloa) நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர்
தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற
இருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை
வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை(24)
காலையில் இடம்பெற்றுள்ளது
.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலை அவசர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்
78 வயதுடைய வயோதிப பெண்
சம்பவதினமான இன்று காலை 6.30 மணியளவில் வீட்டின் முன் உள்ள வீதி பகுதியை
தும்புத் தடியால் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு மோட்டார்
சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் அவரின் கழுத்தில் இருந்த மூன்று
இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அவரை வீதியில்
தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
மூதாட்டி வைத்தியசாலையில்
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலை
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்தனர் .
இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையிளனர் மேற்கொண்டு வருகின்றனர்.
