Home இலங்கை குற்றம் சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது

சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது

0

சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் உள்ள வீட்டில் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 ஆயிரத்தி 500
மில்லி லீற்றர் கசிப்பு உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட நடவடிக்கை

சம்பவத்தில் கைதான வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக
நபர் மற்றும் வீரமுனை 01 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் சந்தேக நபர்
ஆகியோர் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட
விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
ஒருவரிடமிருந்து 13 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பும் மற்றவரிடம்
இருந்து 6 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள்
என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க
சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version