பேருந்தின் சக்கரம் ஏறியதில் ஆண் மற்றும் பெண் என இரண்டு இளம் உயிர்கள் இன்று இரவு பறிபோயின.
மாத்தறை(matara) எலியகந்த பிரதேசத்தில் இன்று (13) இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது அனர்த்தம்
பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் கீழ் இருவரும் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில், மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், மாத்தறை காசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
