Home முக்கியச் செய்திகள் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

0

பண்டாரகம (Bandaragama) – கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பேருந்து திடீரென சாலையின் வலது பக்கம் திரும்பியதும், சாரதி தடுப்பிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது பேருந்து வீதியின் வலது பக்கமாக விலகி கடை ஒன்றின் மீது மோதியதில் வீதியோரம் இருந்த இருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசித்து வந்த 53 வயதுடைய சாந்த ரஞ்சித் மற்றும் எஸ். கே. சுமனசிறி என்ற 60 வயதுடையவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version