Home முக்கியச் செய்திகள் யாழ். நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – பெண் உட்பட இருவர் கைது

யாழ். நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை – பெண் உட்பட இருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கிளிநொச்சியில் (Kilinochchi) பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாடு 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டள்ளது.

இந் நிலையில் யாழ்ப்பாணம் உதவி காவல்துறை அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருவரையும் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/two-people-including-a-woman-arrested-in-jaffna-1732350684?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version