நாவுல – வெல்கால பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்கால, அம்பன பிரதேசத்தில் இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக நாவுல காவல்நிலையத்தில் குறித்த தாதி அளித்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெல்கல – அம்பன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் இராணுவ சேவையில் இருந்து விடுமுறையில் சென்றவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவர்கள் 36, 34 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும்,சந்தேகநபர்கள் நாவுல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாவுல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.