Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்

0

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றத்தினால் குறித்த உணவகங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன்
இரண்டு உணவகமும் நேற்று முன்தினத்திலிருந்து(11) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு சீல்

மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட், பொது சுகாதார பரிசோதகர்களான
மு.ஜெனோயன், தளிர்ராஜ்
இ. தர்மிகன் ஆகியோர் இணைந்த குழு செயற்பாட்டில் இரு உணவகங்களும் சுகாதார
சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த
பிரச்சினைக்கு எதிராக
முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகனால் கிளிநொச்சி நீதிமன்றில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானால் இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா
தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன்
சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை இரண்டு உணவகமும் தற்காலிகமாக மூடுமாறும்
கட்டளையிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version