தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்பிலிப்பிட்டிய – கங்கேயாய பகுதியில் வைத்து குறித்த நபரை மேற்கு வடக்கு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
T-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான சந்தேகநபர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
இதேவேளை தற்போது தேடப்பட்டு வரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி, கெஹல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரின் போதைப்பொருட்களை நாடு முழுவதிலும் விநியோகத்துள்ளதாக கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
