Home இலங்கை அரசியல் வன்னியில் இரு ஆசனங்கள் உறுதி: ஈ.பி.டி.பி தரப்பு ஆணித்தரம்

வன்னியில் இரு ஆசனங்கள் உறுதி: ஈ.பி.டி.பி தரப்பு ஆணித்தரம்

0

வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் யாழ்.தேர்தல் தொகுதியில் மூன்று
ஆசனங்களையும் கைப்பற்றுவோம் என ஈ.பி.டி.பி சார்பில் வேட்பு மனு தாக்கல்
செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் (Kulasingam Dhileeban) குறிப்பிட்டுள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை இன்று (07) வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி
அலுவலகத்தில் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “ஈ.பி.டி.பி க்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பிருக்கிறது. எமக்கு
தொலைபேசியிலும் நேரிலும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம்
இருக்கிறார்கள்.

யாழ்.தேர்தல் தொகுதி

நாம் பல அபிவிருத்தி திட்டங்களை இந்தபிரதேசங்களில் மேற்கொண்டுள்ளோம். அதன்
பிரதிபலிப்பாக எமக்கு இரண்டு ஆசனங்கள் இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில்
கிடைக்கும்.

அதேபோல் யாழ்.தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்களை நாங்கள் கைப்பற்றும். இதன்
மூலமாக மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்போம்” என்றார்.

இந்த நிலையில், ஈ.பி.டி.பி கட்சியின் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version