Home இலங்கை சமூகம் யாழில் கடற்றொழிலுக்கு சென்று காணமல் போன இருவரும் இந்தியாவில் கண்டுபிடிப்பு

யாழில் கடற்றொழிலுக்கு சென்று காணமல் போன இருவரும் இந்தியாவில் கண்டுபிடிப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன
இருவரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

அனலைதீவைச் சேரந்த குறித்த இரு கடற்றொழிலாளர்களும் படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் இன்று (12.06.2024) கரையொதுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரிடமும் தமிழ்நாடு பொலிஸார் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடும்பத்தினர் முறைப்பாடு

அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கடற்றொழிலுக்கு
சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/two-sri-lankan-fishermen-found-in-india-1718202254

NO COMMENTS

Exit mobile version