Courtesy: Sivaa Mayuri
இலஞ்சம் வாங்கியதற்காக ஒரு துணை ஆணையர் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எழுதுவினைஞர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட இருவரையும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் – ஊழல் ஒழிப்பு
மூன்று பேருந்துகளின் உரிமைகளை விரைவாக மாற்றுவதற்காக 300,000 ரூபாயை அவர்கள் இலஞ்சமாக பெற்றதாக ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, புதிய அரசாங்கத்தின் ஏனைய விடயங்களை காட்டிலும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விடயத்திலேயே பொதுமக்கள் அதிக நம்பிக்கையை வைத்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.