Home இலங்கை குற்றம் சட்டவிரோத விடுதியிலிருந்து இரண்டு பெண்கள் கைது

சட்டவிரோத விடுதியிலிருந்து இரண்டு பெண்கள் கைது

0

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (01) காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

ருவன்வெல்ல மற்றும் பசறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 34 வயதுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source: https://tamilwin.com/article/two-women-arrested-from-illegal-hostel-1730554209

NO COMMENTS

Exit mobile version