Home இலங்கை குற்றம் திருகோணமலையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

திருகோணமலையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

0

Courtesy: H A Roshan

திருகோணமலை(Trincomalee) சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளி குடியிருப்பு, பாட்டாளிபுரம் பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25,000 மில்லி லிட்டர் கோடாவும் 49,250 மில்லி லிட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கை

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும் 54 வயதுடைய இரு பெண்கள் எனவும் அவர்கள் தங்க புரம், பள்ளி குடியிருப்பு மற்றும் சின்ன குளம், பாட்டாளிபுரம் பிரதேசத்தில் கசிப்பை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட கோடா மற்றும் கசிப்பையும் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் இன்று(15) மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக சம்பூர் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version