Home இலங்கை அரசியல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்

0

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் (Colombo) இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சியின் உயர்பீடத்திலும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். 

உடன்படிக்கை

இன்று மாலை கட்சியின் உயர்பீடம் மீண்டும் கூடியதுடன், உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டோம்.

அதேபோன்று, மக்களின் கருத்துக்களும் உயர்பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே,
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த போது, கட்சியின் உயர்பீட ம்
எடுக்கும் முடிவையே தாங்கள் ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர்.

எனவே, சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்கான தீவிரப் பிரசாரங்களில்
ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version