Home இலங்கை குற்றம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

0

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(13) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் கைது

மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி இவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்களது முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இதன்போது கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள், 4 தொலைபேசிகள், 23.000 ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இவர்கள் மருதானை பகுதியில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுபவர்கள் என
தெரியவந்துள்ளது.

விசாரணைகள் 

ஈசி- கேஸ் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில
பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனர் என வட்டவளை பொலிஸாரால்
முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

மேலும் ,சந்தேக நபர்களிடம்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இவர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்
தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version